மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உசிலங்குளம் என்ற கிராமத்தில் ராக்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடிசை வீட்டில் வசிப்பவர். இந்நிலையில் மின்கசிவு காரணமாக ராக்கம்மாளின் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.