டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை தமிழக பாஜக எம்எல்ஏக்கள் இன்று சந்தித்தனர். பிரதமர் மோடியை தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், எம்.ஆர் காந்தி, நயினார் நாகேந்திரன், சரஸ்வதி ஆகிய எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக தலைவர் எல். முருகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில் பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தலைவர் எல்.முருகன், பிரதமருடனான சந்திப்பின் போது நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.