Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படி பண்ணா நல்லா இருக்கும்.. சிரமப்படும் வாகன ஓட்டிகள்.. அதிகாரிக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!!

ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் என்ற கிராமத்தில் சுரங்கப் பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக அதிகப்படியான இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அன்றாடம் சென்று வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் திருவெண்ணெய்நல்லூரில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் அதிகப்படியான மழைநீர் தேங்கி கிடக்கிறது.

இந்நிலையில் அவ்வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சுரங்கப் பாதையை கடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வண்ணம் கூரை அமைக்க வேண்டும் எனவும் தற்போது தேங்கி இருக்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |