பாகிஸ்தானில் பொம்மை வடிவ வெடிகுண்டு வெடித்ததில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா என்ற மாகாணத்தில் இருக்கும் டேங்க் மாவட்டத்தின் மெஹ்சுத் கெரூனாகைபர் பகுதியில் சில குழந்தைகள் தெருவில் விளையாடியுள்ளனர். அப்போது அங்கு பொம்மை வடிவ வெடிகுண்டு கிடந்துள்ளது. அது வெடிகுண்டு என்று அறியாத குழந்தைகள் பொம்மை என்று நினைத்து அதை வைத்து விளையாடியிருக்கிறார்கள்.
அப்போது திடீரென்று அந்த பொம்மை வெடிகுண்டு வெடித்துவிட்டது. இதில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.