Categories
மாநில செய்திகள்

ரேஷன் பொருட்கள், குடும்ப அட்டை…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் நியாய விலைக் கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்றும் குடும்ப அட்டைகளுக்கு  விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி கிடைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |