நாடு முழுவதும் பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விலை அதிகரிப்பின் காரணமாக மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வும் அதிகரிக்கும் நிலையிலுள்ளதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் விலை உயர்வை கட்டுப்படுத்த பருப்பு வகைகளை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பருப்பு வகைகளை மொத்த விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் 200 டன்னுக்கு மேல் இருப்பு வைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.