Categories
தேசிய செய்திகள்

“1 குண்டு பல்பு, 1 மின்விசிறி” கரண்ட் பில் ரூ.2.5 லட்சம்…. ஷாக் ஆன மூதாட்டி…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு அவருடைய வீட்டில் ரூபாய் 2.5 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. ஆனால் அவருடைய வீட்டில் ஒரு குண்டு பல்பும், ஒரே ஒரு மின் விசிறி மட்டுமே பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு ரூபாய் 2.5 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச முயற்சித்தும் பலன் ஏதும் இல்லை. நான் என்னுடைய வீட்டில் ஒரே ஒரு குண்டு பல்பும், ஒரே ஒரு மின்விசிறியும் தான் பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |