நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. சில மாநிலங்களில் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் ஜூலை 5-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.