Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்போதான் இதை முடிப்பீங்க… பொதுமக்களின் எச்சரிக்கை… சப்-கலெக்டருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

புதிதாக நடைபெறும் தார்சாலை பணியை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் சப்- கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன் புதூரில் வசிக்கும் மக்கள் ஒன்றிணைந்து சப்-கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கவுண்டன்புதூரில் இருக்கும் சாலையானது 20 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டதாகவும், அதனை சீரமைக்க வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பின் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு பிறகு அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுள்ளது. ஆனால் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி 3 மாதங்கள் கழிந்த பிறகும் அதனை முடிக்காமல் இருப்பதால் ஜல்லி கற்கள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.

எனவே தாமதமாகும் பணியை முடித்து புதிய தார்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் ஆழ்துளை கிணற்றை சரி செய்து தருமாறும் பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதோடு மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற 20-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |