ஓணம் பண்டிகையின் சிறப்பு உணவான அப்பம் செய்வது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்:
தேவையான பொருள்கள்:
2 கப் பச்சரிசி
தேங்காய்
பச்சை வாழைப்பழம்
நாட்டு சர்க்கரை
அப்ப சட்டி
எண்ணெய்
செய்முறை :
ஒரு கப் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு பாத்திரம் ஒன்றில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் தேங்காய் ஒரு கப் தேங்காய் சேர்த்து பின் ஒரு பச்சை வாழைப்பழத்தை துண்டுதுண்டாக வெட்டி பின் நன்கு பிசைந்து நாட்டு சர்க்கரை முக்கால் கப் எடுத்து அதனை தண்ணீரில் கரைத்து சர்க்கரை கரைசலாக மாற்றி வைத்துக் கொள்ளவும். பின் அதனை தேங்காய் மற்றும் பச்சரிசி கலந்த கலவையில் வடிகட்டி ஊற்றவும் பின் பிசைந்து வைக்கப்பட்ட வாழைப்பழத்தையும் இதனுடன் சேர்த்து மிக்ஸ் செய்து மீண்டும் சர்க்கரை கரைசலை அதன் மீது ஊற்றவும்.
பின் அதனை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் ஏலக்காய் சிறிது சேர்த்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு அதனை நன்றாக மிக்ஸ் செய்து சிறிது நேரம் அந்த மாவுக் கலவையை புளிக்க வைக்க வேண்டும். அதற்கு பின் அப்பக் குழி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் உள்ள குழிகளில் மாவு எண்ணெய் சேர்த்து அதனுள் பணியாரம் செய்வது போல் அந்த மாவை விட்டு நன்கு வேக வைத்து விட்டு பின் திருப்பி போடவும். இரண்டு புறமும் நன்கு வெந்த பின் அதனை ஒரு எண்ணெய் சட்டியில் \ போட்டு சற்று வறுத்து எடுக்கவும். வறுத்த பின் தட்டில் எடுத்து சாப்பிட்டால் அருமையான அப்பத்தின் சுவையை நீங்கள் உணரலாம்.