Categories
உலக செய்திகள்

உலகமே ஆபத்தான கால கட்டத்தில் உள்ளது…. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 100 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உலகம் கொரோனா தொற்றின் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார மைய இயக்குனர் மருத்துவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து  உருமாற்றம் அடைந்து வரும் வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே பெரும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதேசமயம் மருத்துவ தடுப்பு ஊசிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும். இந்த ஆண்டு செப்டம்பருக்குள் அனைத்து நாடுகளிலும் 10% மக்களாவது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |