Categories
தேசிய செய்திகள்

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றால் 6 கோடி…. ஹரியானா அரசு அறிவிப்பு….!!!

ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக்கும் நடக்கிறது. இந்த போட்டிக்காக ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் தயாராகி உள்ளன. இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஹரியானா அரசு பரிசு தொகை அறிவித்துள்ளது. தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 6 கோடி, வெள்ளி வெல்லும் வீரர்களுக்கு 4 கோடி மற்றும் வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு 2.5 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் இருந்து ஒலிம்பிக்ஸில் பங்கேற்பு 30 வீரர்களுக்கும் 5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |