Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கார் மோதி விபத்து…. சமையல்காரர் பரிதாபம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் முள்ளிபக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் சமையல்காரராக இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வஞ்சுவாஞ்சேரிக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் திரும்பியபோது ஓரகடத்தில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த கார் சரவணன் மோட்டார்சைக்கிள் மீது மோதியுள்ளது .

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |