Categories
தேசிய செய்திகள்

3,10,00,000 பேர் கஞ்சா அடிமைகள்….. இடம் பிடித்த 2 இந்திய நகரம்… ஆய்வில் அதிர்ச்சி…!!

உலக அளவில் கஞ்சா பயன்படுத்துவதில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கஞ்சா குறித்த ஆய்வில் இந்தியா_வின் இரண்டு முக்கிய நகரங்களை 10 இடங்களுக்குள் இருக்கின்றது என்று தெரியவந்துள்ளது. ஒரே ஆண்டில் 77.4 டன் கஞ்சா பயன்படுத்திய நியூயார்க் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி உள்ளதாகவும் இங்கு 42 டன் கஞ்சா பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்த டெல்லியில் கடந்த ஆண்டு மட்டும் 39 டன் அளவுக்கு கஞ்சா கஞ்சா புகைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்றொரு நகரமான மும்பை ஆறாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 3 கோடியே 10 லட்சத்து பேர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |