Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… சீமான் கடும் கண்டனம்…!!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் அடுத்து தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்டோ, டாக்ஸி, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அன்றாட தேவைகளின் பொருள்கொள்ளும் அதிகரித்துள்ளது. லாரி, ஜேசிபி வாகனத்தின் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி உள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாகத்தில் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது என சீமான் குற்றம்சாட்டியுள்ளார். ஊரடங்கின் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் இந்தவேளையில் பெட்ரோல் டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தியது மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்குகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |