Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி…. பொதுமக்களின் புகார்…. வன அதிகாரியின் அறிவுரை….!!

மலைக்கிராமங்களில் வன அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டு வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மச்சூர், மூலையாறு, வடகரைபாறை போன்ற மலைக்கிராமங்களில் 200-க்கும் மேல் உள்ள பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சட்டப்படி வனப்பகுதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் வேலி அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மச்சூர், வடகரைபாறை ஆகிய பகுதிகளில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் காபி, ஆரஞ்சு போன்றவற்றை சாகுபடி செய்தனர்.

அதன்பின் அங்குள்ள வன ஊழியர்கள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதாக பழங்குடியின மக்கள் கொடைக்கானல் ஆர்.டி.ஓ.விடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி உதவி வன பாதுகாவலர் நாகையா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டதில் வனத்துறையினர் தோட்டத்திற்குள் புகுந்தது தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினரிடம் உரிமைச்சட்டத்தில் பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் இதுபோன்று செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரி அறிவுரை வழங்கினார்.

Categories

Tech |