Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் டிக்டாக் செயலியின் தடை நீக்கப்பட்டது.. மீண்டும் பயன்படுத்த தொடங்கிய மக்கள்..!!

பாகிஸ்தான் அரசு டிக்டாக் செயலுக்கு தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றம் தடையை நீக்க உத்தரவிட்டுள்ளது.

இளைஞர்களும் பெண்களும் அடிமையாகிப்போன டிக் டாக் செயலிக்கு, இந்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் பல நாடுகளில் தற்போதும் டிக்டாக் பயன்பாட்டில் இருக்கிறது. இதே போன்று பாகிஸ்தான் நாட்டிலும் லட்சக்கணக்கானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் பாகிஸ்தானில் உள்ள பழமைவாதிகள், டிக்டாக்கில் ஆபாசமாக பதிவிடப்படுவதாகவும் எல்ஜிபிடி சமூகத்தை ஊக்குவிப்பது போல் பதிவுகள் உள்ளது என்றும்  விமர்சித்தனர். இந்நிலையில் ஒரு நபர் சிந்து மாகாண நீதிமன்றத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்குமாறு  வழக்கு தொடர்ந்திருந்தார்.

எனவே, பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது இச்செயலியை தடைவிதித்து உத்தரவிட்டது. அதன்பின்பு அதே நீதிமன்றத்தில், தொடரப்பட்ட வழக்கால் டிக் டாக் செயலிக்கு விதித்த தடை நீக்கப்பட்டது. எனினும் பிரச்சனையை உண்டாக்கும் பதிவுகளை உடனே நீக்கி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. எனவே பாகிஸ்தான் மக்கள் டிக் டாக் செயலியை மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |