ஜப்பானில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் பல குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் தலைநகராக டோக்கியோ விளங்குகிறது. இந்த டோக்கியோவிற்கு அருகில் அட்டாமி என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஜப்பான் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அட்டாமி நகரத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த பல குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்ததையடுத்து அதில் வசித்து வந்த 19 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உயர் அவசர எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.