Categories
உலக செய்திகள்

2 வருடங்களாக கொடுமை அனுபவித்து வந்த சிறுமி.. சொந்த வீட்டிலேயே துன்புறுத்தி வந்த நபர் கைது..!!

அமெரிக்காவில் ஒரு சிறுமியை 2 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசிக்கும், 34 வயதுடைய சீன் மைக்கேல் கான்ராய் என்ற நபர் 17 வயதிற்கும் குறைந்த சிறுமியை கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து, 2019 ஆம் வருடம் வரை பல தடவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மைக்கேல் அந்த நேரத்தில், சிறுமியின் வீட்டில் தான் தங்கியிருந்துள்ளார்.

சிறுமியின் தாயாரும் வீட்டில் இருந்திருக்கிறார். எனினும் மைக்கேல், தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். தூங்கும் போதும் துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது தான் இச்சம்பவம் வெளிவந்துள்ளது. எனவே உடனடியாக மைக்கெல் கைது செய்யப்பட்டு, பிரேஸோஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Categories

Tech |