குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் தமிழ்செல்வி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தமிழ்செல்வி தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து திருப்புவனம் காவல் துறையினரிடம் தமிழ்ச்செல்வியின் தாயார் அம்சவள்ளி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தமிழ்ச்செல்வியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து தமிழ்ச்செல்வி உறவினர்கள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் துறையினரிடம் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.