நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள குடி யடமைத்தே வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை அமலா பால் ‘மைனா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், சூர்யா போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அதோ அந்த பறவை போல, காடவர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
You're going to be hooked on this one! Can't wait for you all to watch this unmissable sci-fi crime thriller on @ahavideoIN
▶️https://t.co/h3TYqVhgLz@ActorRahulVijay @pawanfilms @onelifeitiz @RajMadiraju @eshwarrachiraj1 @suryasreenivasp @Raviprakash_Ind @SettamPadmini
— Amala Paul ⭐️ (@Amala_ams) July 3, 2021
மேலும் நடிகை அமலாபால் தெலுங்கில் பவன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள குடி யடமைத்தே என்கிற வெப் சீரிஸில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் வருகிற ஜூலை 16-ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் குடி யடமைத்தே வெப் சீரிஸின் அதிரடியான டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.