லாஸ்லியா, ஹர்பஜன் சிங் இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியாவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி ஹர்பஜன்சிங் ஹீரோவாக நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜான் பால் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், சதீஷ், குக் வித் கோமாளி பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#AdichuParakkaviduma Single From #FriendshipMovie #HBDHarbhajanSingh
Tamil-https://t.co/houixkkJtm
Telugu-https://t.co/ftmFx5tbzr
Hindi-https://t.co/Y3nGjQVe18@harbhajan_singh #Arjun @actorsathish #Losliya @JPRJOHN1 @shamsuryastepup @DMUdhayakumar @santhadop @RIAZtheboss pic.twitter.com/LS15tIKOya— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 3, 2021
ஏற்கனவே இந்த படத்தில் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்ற இந்த குத்து பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து லாஸ்லியாவும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.