இந்தியா முழுவதும் உயர்த்தப்பட்ட இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் கூறும் போது , 18 வயது முதல் 35 வயது வரை உயிர் இழக்கும் இளைஞர்கள் இந்தியாவில் தான் அதிகம். சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை. அபராதத்தை அதிகப்படுத்தினால் சாலை விதிகளை மதிப்பார்கள் என்று தான் உயர்த்தினோம்.
விபத்துக்கள் உயிரிழப்புகள் கூடாது என்பதுதான் எங்களது விருப்பம் . விதி மீறலுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால் அபராதத்தை உயர்த்தி வசூலிக்க பல மாநில அரசுகள் முன்வராத நிலையில்சாலை விதிமீறல் அபராத கட்டடனத்தை மாநில அரசுகள் விரும்பினால் குறைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.