தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். குடும்ப அட்டை இல்லாதவர்கள் புதிய அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த இணையதளம் தற்போது பராமரிப்பு காரணமாகமுடக்கப்பட்டுள்ளது. இது குறித்த வேறு பல சந்தேகங்களுக்கு 1967 என்ற எண் அல்லது support.tnpds.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.