லிபிய கடற்படை மத்திய தரைக்கடல் அகதிகள் பயணித்த படகை சுட்டு மோதி கவிழ்க்க முயற்சித்த சம்பவம் குறித்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜெர்மன் தன்னார்வ தொண்டு நிறுவனமான Sea-watch, லிபிய கடற்படையானது ஐரோப்பா நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த அகதிகள் படகின் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் லிபிய கடற்படை அந்த அகதிகள் பயணித்த படகை நோக்கி 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் அகதிகள் பயணித்த அந்த படகினை பலமுறை மோத முயற்சித்த லிபிய கடற்படை அந்த அகதிகளை நோக்கி கட்டைகளையும் வீசி தாக்கியுள்ளது. மேலும் sea-watch நிறுவனம் அந்த அகதிகள் படகில் சுமார் 45 பேர் இருந்ததாகவும், இத்தாலியின் Lampedusa பகுதிக்கு லிபிய கடற்படை தாக்குதலில் இருந்து தப்பிய அந்த அகதிகளின் படகு சென்றதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.