Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட மகன் …. ஆத்திரமடைந்த தந்தையின் விபரீத செயல் …. கைது செய்த போலீசார் ….!!!

ரேசன் கார்டு  அடகு வைத்து குடித்துவிட்டு வந்த  மகனை அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர் .

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்துள்ள களம்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் மகன் பாஸ்கர் என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.இதில் பாஸ்கரும்  அவருடைய மனைவி ரம்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் பாஸ்கர் தனது தந்தை தட்சிணாமூர்த்தி , தாய் பவானி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  மது பழக்கத்திற்கு அடிமையாக பாஸ்கர் மது குடிக்க தாய் பவானியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டதால் வீட்டில் இருந்த ரேஷன் கார்டை எடுத்து அடகு  வைத்து வாங்கிய பணத்தில் மது குடித்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாஸ்கரிடம் அவருடைய தாய் பவானி ரேஷன் கார்டு எங்கே என்று கேட்தற்கு மதுபோதையில் இருந்த அவர் தாயை தாக்கியுள்ளார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த தந்தை தட்சிணாமூர்த்தி அங்கிருந்த இரும்பு  ராடால் மகன் பாஸ்கரை  தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே பாஸ்கர்  உயிரிழந்தார். இதைக் கண்ட அவரது தாய் , தந்தை இருவரும் கதறி அழுதனர். இதன் பின்னர்  தட்சிணாமூர்த்தி களம்பூர் காவல்  நிலையத்தில் சரணடைந்தார் . இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை  கைது செய்தனர் . இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த பாஸ்கரின்  உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |