Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொபட்டில் வீடு திரும்பியவர்… பயங்கர விபத்தில் உயிரிழப்பு… சோகத்தில் தொழிலாளி குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் மொபட்டில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளி மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சின்னமன்று(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அவரது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் அவரது மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-குமுளி சாலையில் சென்று  கொண்டிருக்கும்போது அப்பகுதியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியுள்ளது.

இதற்கு தொடர்ந்து பின்னால் வந்த மினி லாரி மீது மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் மொபட்டில் சென்ற சின்னமன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மினி லாரி டிரைவரும் படுகாயமடைந்த நிலையில் தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |