ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாவது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தர்பார்.ரஜினியின் 167 வது படமான தர்பாரில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடத்தியுள்ளார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாகும் தார்பர் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ரஜினியின் பேட்ட படத்திற்கு இசையமைத்த அனிருத் இதற்கும் இசையமைப்பது படத்திற்கு கூடுதல் பலம். இந்நிலையில் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிகப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாக ஒரு மணி நேரத்தில் ரஜினி ரசிகர்கள் தங்களின் சேட்டையை தொடங்கி விட்டனர். ட்வீட்_ட்ரை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள் செகண்ட் லுக் போஸ்டர் அறிவிப்பை இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இரண்டு மணி நேரத்திற்கு இந்தியளவில் ட்ரெண்ட்_டாகி வருவது குறிப்பிடத்தக்கது.