Categories
மாநில செய்திகள்

“தேஜஸ் ரயில்” விமான பயணத்திற்கு இணையான சேவை… அசத்தும் ரயில்வே துறை…!!

தனியார் இயக்க உள்ள தேஜஸ் ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டிலேயே முதன்முறையாக தனியார் இயக்கும் தேஜஸ் விரைவு ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு சிறப்பு வசதிகளை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் விமானங்களில் உள்ளது போல உபசரிப்பு பெண்கள் பயணிகளுக்கு உதவி செய்வார்கள். அதேபோல் வீடுகளிலிருந்து உடமைகளை எடுத்து வருவதற்கும் கொண்டு செல்வதற்கும்  தங்கும் விடுதி விமான டிக்கெட் உள்ளிட்டவற்றை ஐஆர்டிசி மூலம் ரயில் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Image result for tejas train

கேட்டரிங் சேவை மற்றும் உடமைகளை பாதுகாக்க சிறப்பு மையம் உள்ளிட்டவை உயர் வகுப்பில் பயணம் செய்வோருக்கு வழங்கப்படும் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருந்தாலும் பயணத்திற்கான மொத்த செலவை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. தேஜஸ் ரயில் பயணக் கட்டணம் அவ்வபோது மாறிக்கொண்டே இருக்கும். இருப்பினும் விமானத்தை விட குறைவாகவே நிர்ணயிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

Image result for tejas train

இதற்கு முன்னர் ராஜ்தானி சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் கட்டணங்களில் மாறுபட்ட கட்டண முறை செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனியார் உதவியுடன் நாட்டில் ரயில் பயணத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ரயில்வே ரயில் பயணிகளை உற்சாகப்படுத்த பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உள்ள தனியார் நிறுவனம் ஏலச்சீட்டு செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படும் என்றும் இந்த ரயில் சேவையை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |