காரிலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண்ணை பத்திரமாக ஜெர்மனி சுங்க அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் இருந்து பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணியான மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு கணவர் ஜெர்மனி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனால் சுவிஸ் எல்லையில் வந்துகொண்டிருக்கும் போது காரிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது . அப்போது ஜெர்மனி பாஸல் பகுதியில் உள்ள சுங்க சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளிடம் சென்று மனைவிக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த வாகனத்தை சோதனையிட்ட போது பெண் மயக்கமுற்ற நிலையில் கையில் பிறந்த குழந்தையை ஏந்தியபடி இருந்துள்ளதை கண்டனர். ஆனால் காரிலேயே குழந்தை பிறந்ததால் தொப்புள்கொடி வெட்டப்படாமல் இருந்துள்ளது. இதைகண்ட அதிகாரி ஒருவர் உடனடியாக மருத்துவ கத்தரிக்கோலை பயன்படுத்தி குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி அப்புறப்படுத்தினர். இதையடுத்து மருத்துவ குழுவினரின் உதவியுடன் அதிகாரிகள் தாய், குழந்தை இருவரையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.