அ.தி.மு.க.வில் ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி. தினகரனுக்கு ஆதராவாக சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தார். அமமுக-விலருந்து பலர் விலகினாலும் பழனியப்பன் தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசயிலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரசியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.
இதனால் அமமுக நிர்வாகிகள் பலர் அதிர்ப்தியில் இருந்தனர். சசிகலாவும் தொடர்ந்து தொலைபேசியில் தொண்டர்களுடன் பேசி வந்தாலும் அரசியலுக்கு மீண்டும் எப்போது திரும்புவார் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. அதிமுக-விலிருந்து நீக்கப்படும் நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன்,டேவிட் செல்வன் உள்பட 20 பேர் கடந்த வாரம் தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலார் பழனியப்பன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்துள்ளது டி.டி.வி தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.