Categories
சினிமா தமிழ் சினிமா

தேவையில்லாம மூக்கை நுழைக்காதீங்க…. “நான் கர்ப்பமா இல்லை”….. செம கடுப்பான சின்மயி…!!!

பிரபல பாடகி சின்மயி மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ராகுல் ரவீந்திரனை சென்னை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சின்மயி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். ஆனால் தன்னுடைய எந்த ஒரு தனிப்பட்ட விஷயங்களையும், குடும்ப புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொள்ள மாட்டார்.

இந்நிலையில் சின்மயி கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அவரது தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது தன்னுடைய கர்ப்பம் குறித்து இணையத்தில் பரவி வரும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு பொய்யான செய்தியை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம் என்றும், தன்னுடைய வாழ்க்கையில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |