Categories
உலக செய்திகள்

படகில் பயணித்த அகதிகள்…. நடுக்கடலில் ஏற்பட்ட சோகம்….!!

இத்தாலியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

துனிசியா லிபியாவின் கடற்கரையில் இருந்து இத்தாலியை நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் படகு எதிர்பாராதவிதமாக தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்தப் படகில் பயணம் செய்தவர்கள் எகிப்து, சூடான், சிரியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் என்றும்தண்ணிரில் தத்தளித்து கொண்டிருந்த 84 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 43 பேரின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Categories

Tech |