தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து பிழைப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முன்மாதிரியாக பாதுகாப்பு அளிக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்பவர்களுக்கு காப்பீடு போன்ற திட்டத்தை அறிவிக்க உள்ளோம். மேலும் வெளிநாடு சென்று திரும்பி ஊருக்கு 5 ஆண்டு கால நிர்ணயத்தின் வட்டியில்லா கடனை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.