Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைப்பு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதிலும் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்டு பால் விற்பனை செய்யப்பட வேண்டும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் சென்னையில் பழைய விலைக்கே ஆவின் பால் விற்ற 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சேலம் ஆவின் பால் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகு இதைத் தெரிவித்தார்.

Categories

Tech |