Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தியை வைத்து மிரட்டல்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

அதிகாரியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி தந்தி முருகன் நகரில் பழனி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஓய்வுபெற்ற குடும்ப நலன்துறை அதிகாரியாக இருந்துள்ளார். இவருக்கு அருந்ததி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டில் உள்ள ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் நுழைந்து முகமூடி அணிந்த நிலையில் கணவன்- மனைவி இருவரையும் கத்திமுனையில் தாக்கி நகை மற்றும் பணத்தை தரவேண்டும் என்று மிரட்டி இருக்கின்றனர். இதனைனிடுத்து பழனியை மர்ம நபர்கள் தாக்கியதால் அவரது மனைவி அருந்ததி தான் அணிந்திருந்த 20 பவுன் நகைகளையும் அவர்களிடம் கொடுத்து விட்டார்.

மேலும் பணம், நகை கேட்டு மர்ம நபர்கள் மிரட்டியதால் வீட்டு பீரோவில் இருந்த துணிமணிகளை தேடிப்பார்த்தும் எதுவும் இல்லாததால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கணவன் பழனி கொடுத்த புகாரின்படி டி.எஸ்.பி. சுகுமாரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாயை வைத்து கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் அவர்கள் வசிக்கும் தெரு பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் மர்ம நபர்களின் உ ருவன் பதிவாகி இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று திண்டுக்கல்லில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வீடு புகுந்து 100 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தவர்கள் காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |