திண்டுக்கல்லில் டாஸ்மாக் திறக்கப்பட்டதை அடுத்து மது வாங்குவதாகக ஏராளமானனோர் திரண்டு வருகின்றனர்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபானக்கடைகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மது கடைகளும் செயல்பட்டு விற்பனை நடைபெறுகின்றது. இந்த மதுபான கடைகளில் ஊரடங்கிற்கு முன் தினசரி 4 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ஊரடங்கு பின் கடந்த 14-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது 6 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
எனவே திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் அங்கு இருக்கக்கூடிய மதுபிரியர்கள் திண்டுக்கல் பகுதிக்கு திரண்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தின் மது விற்பனையானது அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனையடுத்து மாவட்டத்தில் தினசரி 6 கோடிக்கு மது விற்கப்பட்டு அதில் அதிகமாக 6 கோடி 73 லட்சமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பிறமாவட்டங்களில் மதுக்கடைகளை திறந்தால் திண்டுக்கல்லில் மதுபான விற்பனை குறைந்துவிடும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.