Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்.. அதிகாரிகளின் திடீர் சோதனை… பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

நடைமுறையிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத கடைகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டுப்பகுதியில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் ஊடரங்கு கட்டுப்பாட்டுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  தாசில்தாரான காமாட்சி மற்றும் காவல்துறையினர் கொரோனோ கட்டுப்பாடுகள் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சோதனை செய்துள்ளனர்.

அப்போது பல்வேறு கடைகளில் மற்றும் உணவகங்களில் மாஸ்க், சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்தாமலும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமலும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கட்டுப்பாடுகளை பின்பற்றாத 12 கடைகளில் ரூபாய் 2400 அபராதம் விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |