மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கி இருப்பதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் நீதிமன்றத்திற்கும் ஆவின் பால் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட 4-வது தெருவில் பள்ளமாக இருக்கின்றது. இந்தத் தெருவின் இருபக்கத்திலும் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மழை நீர் வடிந்து செல்ல முடியாமல் சாலையோரம் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமமல், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.