பள்ளத்தில் விழுந்த காட்டுப்பன்றியின் கால் துண்டான நிலையில் வனத்துறையினர் அதனைமீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி கிராமத்தில் நேற்று வழிதவறி வந்த காட்டுப் பன்றியானது 50 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இதனால் பன்றியின் முன்காலில் பலத்த அடிபட்டு துண்டாக உடைந்து விழுந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த காட்டுப்பன்றி வேறு எங்கும் செல்ல முடியாமல் கத்தியுள்ளது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த காட்டுப்பன்றியை மீட்டனர். அதன் பிறகு கால்நடை மருத்துவமனையில் வைத்து காட்டுப்பன்றிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்பு சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் காட்டுப்பன்றி காட்டுப்பகுதியில் கொண்டு விடப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.