கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்த காவிரி நீர் இன்னும் பல இடங்களில் கடைமடைக்கு போய் சேரவில்லை என்றும் கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலப்பது போல் இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த அறிக்கையின் படி, கொள்ளிடத்தில் 6 டிஎம்சி நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும் உள்ளூரில் உள்ள நீரை கடலில் கலக்க அனுமதித்துவிட்டு இஸ்ரேல் போகிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி சொல்வது வேடிக்கை வினோதமாக உள்ளது என்றும் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.