Categories
உலக செய்திகள்

பூனைகளுக்கு பொதுமுடக்கம் அறிவித்த நாடு.. மீறினால் அதிக அபராதம்..!!

ஆஸ்திரேலியாவில் பூனைகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பரவத்தொடங்கியதால், ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியவுடன் விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இருக்கும் நாக்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் ஒரு மேயர் வெளியிட்ட அறிவிப்பில், இப்பகுதியில் வாழும் மக்கள் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து தங்களின் செல்லப் பிராணிகளான பூனைகளை வெளியில் விடாமல் வைத்திருக்க வேண்டும்.

அதனை மீறி பூனைகள் வெளியில் வரும் பட்சத்தில், அதன் உரிமையாளர்கள் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனை மீறும் நபர்களுக்கு அபராதம் அதிகமாக விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து சுமார் ஆறு மாதங்கள் வரை அபராதம் செலுத்த வேண்டியதில்லை.

எனினும் அந்த சட்டம் அமலில் இருக்கும். மேலும் இந்த சட்டமானது, கொரோனா பாதிப்பிலிருந்து பூனைகளை பாதுகாப்பதற்காக தான். மேலும் பூனைகளை வேட்டையாடுவது அந்த பகுதியில் அதிகமாக இருக்கிறது. எனவே இவ்வாறு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |