Categories
மாநில செய்திகள்

“கனவு ஆசிரியர் விருது” அக்-15க்குள் பரிந்துரைக்க வேண்டும்… பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

கனவு ஆசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கற்பித்தல் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளில் இணைந்து விளங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. விருது பெறுபவருக்கு பாராட்டு சான்றிதழும், பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்படும் இந்நிலையில் கல்வி துறையின் வழிகளை பின்பற்றி முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அதிகாரி, மூத்த வட்டார கல்வி அதிகாரி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் ஆகியோர் கொண்ட மாவட்ட தேர்வுக்குழு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

Image result for கனவு ஆசிரியர் விருது

மேலும் விவரிக்கையில் புகைப்பட ஆதாரங்களுடன் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும். என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவமுடைய தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும். என்று அரசின் தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை பரிந்துரைக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |