Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. எப்படி விண்ணப்பிப்பது?….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு 500 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காக அரசு உதவித்தொகை வழங்குகிறது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், எஸ்எஸ்எல்சி, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள், 2021 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் இந்த ஆண்டு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்தால் போதும். இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் 75 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர் தமிழகத்திலேயே கல்வி பயின்றவர் ஆகவும் இருப்பது அவசியம். வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். வேறு எந்தவித உதவித்தொகை பெறாதவராகவும் பள்ளி மற்றும் கல்லூரி சென்று படிக்காதவராக இருக்க வேண்டும்.விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் கல்வித்தகுதி சான்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |