Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவம்…. இந்த ஆதாரம் போதும்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அடுத்தடுத்து 3 கோவில்களில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு ஏகாம்பரம் என்ற கோவில் பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேபோன்று வாணியம்பாடி ராமையன் தோப்பு பகுதியில் உள்ள பாரத கோவில் மற்றும் முருகன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோ, உண்டியலை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருட்டு போன சம்பவம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மர்மநபர்கள் திருடிச் சென்ற காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருப்பதனால் காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |