அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 90. உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். 2001ஆம் ஆண்டு திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர், அறநிலையத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories