Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்…? கிணற்றில் கிடந்ததால் அதிர்ச்சி…. திருப்பத்தூரில் சோகம்….!!

கிணற்றில் ரயில்வே ஊழியர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்னாங்குப்பம் புதூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அழுகியபடி ஒரு ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருப்பத்தூர் ரயில்வே காலனியில் வசித்து வந்த ரூபேஷ்குமார் என்பதும், இவர் ரயில்வே நிலையத்தில் இரவு காவலராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் இவருக்கு திருமணமாகி காயத்ரிதேவி என்ற மனைவியும், நவீன் கேசவ் என்ற மகனும் இருக்கின்றனர். ஆனால் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கணவன்- மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் காயத்ரிதேவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ரூபேஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில் மது அருந்திவிட்டு கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |