Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் பிரபு தேவாவின் படம்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். ஏ.சி.முகில் இயக்கியுள்ள இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் பிரபு தேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் பொன் மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |