பிச்சைக்காரர்களுக்கும் மூன்று வேளை சத்தான உணவு, சுகாதாரமான தண்ணீர், தங்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் எல்லாவற்றையும் அரசால் இலவசமாக கொடுக்க முடியாது. பிச்சைக்காரர்களும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி கூறுகையில், ” அவர்களும் (பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்கள்) கண்டிப்பாக நாட்டுக்காக உழைக்க வேண்டும். எல்லோரும் உழைக்கிறார்கள். எல்லாவற்றையும் மாநில அரசால் வழங்க முடியாது. நீங்கள் (மனுதாரர்) இவர்கள் போன்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறீர்கள்” என்றனர். அதே நேரத்தில் வீடு இல்லாதவர்கள் பொது கழிப்பிடங்களை இலவசமாக பயன்படுத்த அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.