Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… மளமளவென பற்றி எரிந்த தீ… பல மணி நேர போராட்டம்…!!

ரப்பர் குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்து விட்டனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் பகுதியில் சேது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ரப்பர் பொருட்கள் தயாரிப்பு சம்பந்தமான குடோனானது அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரப்பர் குடோனில் மாலை 5 மணி அளவில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரப்பர் குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

இதற்கிடையில் ரப்பர் குடோனுக்கு அருகில் வசித்து வரும் பொது மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். அதன் பின் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் ரப்பர் குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான ரப்பர் பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |